இந்த பழக்கங்கள் தான் குண்டாவதற்கு காரணம்

நீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. நீங்கள் பழக்கப்படுத்தியிருக்கும் சில மோசமான விசயங்களும் காரணகர்த்தாவாக இருக்கிறது.
இந்த பழக்கங்கள் தான் குண்டாவதற்கு காரணம்
Published on

மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும். அதனால்தான் அந்த காலத்தில் சொன்னார்கள். நொறுங்கத் தின்னால் நூறு வயது..

முடிந்த அளவு ஹோட்டல், கையேந்தி பவன், துரித உணவகம் போன்ற இடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள். அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் மோசமான கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.

நேரமில்லை என்று சாக்கு சொல்லாமல், புத்தியை தீட்டி, வீட்டிலேயே நேரத்தை குறைக்கும் எளிய உணவுகளை செய்ய பழகிக் கொள்ளுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்தை இருமடங்காக்கும்.

இரவு 7 மணி ரெண்டுங்கெட்டான் நேரம். பெரும்பாலோனோருக்கு அந்த சமயத்தில்தான் பசி எடுக்கும். இரவு டின்னரையும் முடிக்க மனதில்லாமல் ஸ்நேக்ஸ் மீது நாட்டம் போகும்.

ஆனால் அது உடல் பருமனை அதிகப்படுத்த மிக முக்கியமான காரணமாகும். ஆகவே அந்த சமயத்தில் பழங்கள் அல்லது சூப் சாப்பிட்டு 8 மணி வரை பொறுமை காத்தால் உங்களுக்கு வெற்றி.

மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவறாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டு பண்ணும். உளவியல் ரீதியாக சிலருக்கு மன அழுத்தம் இருக்கும்போது சாப்பிடத் தோன்றும். அதுவும் தவறு. அந்த சமயத்தில் நீர் அல்லது சூயிங்கம் மென்றுதல் போன்றவற்றை செய்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com