வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை

ஜீரண சக்தி சரியாக இயங்காமல் நிறைய மனிதர்கள் அவதிப்படுகின்றனர். சிறுகுடல், பெருங்குடல், வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரையைக் காணவுள்ளோம்.
சூரிய முத்திரை
சூரிய முத்திரை
Published on

செய்முறை

முதலில் விரிப்பு விரித்து கிழக்குத் திசை அல்லது மேற்குத் திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கீழே உட்கார முடியாதவர்கள் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம்.

முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். பின்பு உங்கள் மனதில் இப்பொழுது செய்யப் போகும் சூரிய முத்திரையின் மூலம் எனது சிறுகுடல் பெருங்குடல் வயிற்றுப்பகுதி சுத்தடையப் போகின்றது. அங்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சிறப்பாக இயங்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மோதிர விரலை மடக்கி அதன்மேல் கட்டைவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இரு கைகளையும் இதே போல் வைத்து செய்ய வேண்டும். இந்நிலையில் பத்து நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.

முதலில் பயிற்சி செய்கின்றவர்கள் ஐந்து நிமிடங்கள் செய்யவும். படிப்படியாக பயிற்சி செய்யும் நேரத்தை பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்களாக உயர்த்தவும். செய்து முடித்தவுடன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு பின் எழவும்.

உடலில் குடல் சூடு ஏற்பட்டால், குடலில் புண் ஏற்படும். பின்பு வாய் துர்நாற்றம் ஏற்படும். பிறரிடம் பேசினால் எதிரில் நிற்பவர் முகம் சுழிப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் உடலில் சூடு அதிகமானதுதான். அதனை கட்டைவிரல் நெருப்பு தத்துவம் கட்டுப்படுத்துகின்றது. மோதிர விரல் நில தத்துவம். நமது வயிற்றுக்கு கீழ்ப்பகுதி -நிலம். கட்டைவிரலினால் மோதிர விரலில் அழுத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் குறிப்பாக குடலில் உள்ள அதிக சூட்டை சமப்படுத்துகின்றது. மேலும் சிறு,பெருங்குடல் சுத்தமாவதால் பசி இல்லாமல் அவதிப்படுவோரும் இம்முத்திரையைச் செய்தால் நல்ல பலன் உண்டு.

சூரிய முத்திரையின் இதர பலன்கள்

- தொப்பை குறையும்

- உடலில் கொழுப்பு குறையும்

- மன அமைதி உண்டாகும்

- உடல் அதிக எடை குறையும்

- உடல் களைப்பு நீங்கும்

- உடலில் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்

- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்

யோகக் கலைமாமணி

P.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

6369940440

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com