சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தய பேஸ்பேக்

வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும்.
சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தய பேஸ்பேக்
Published on

வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.

வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com