வெயிலில் சரும நிறமாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்

வெயில் காலத்தில் ஏற்படும் தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன் பராமரிப்பு முறைகளை பார்க்கலாம்.
வெயிலில் சரும நிறமாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்
Published on

வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு எடுத்துக்கொண்டால், இது எளிதில் சரிசெய்துவிடும் விஷயமே. எளிமையான பொருள்களைப் பயன்படுத்தியே சன் டேனிங்கை சரிசெய்துகொள்ளலாம்.

சோற்றுக்கற்றாழையை இரண்டாகக் கீறி, உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பொருளைத் தனியே எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். பிறகு, மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். முகம், கை, கால்கள், கழுத்து என நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடவும். சன் டேன் காணாமல் போகும்.

சிறிதளவு காய்ச்சாத பால், பாதாம் நான்கு, கசகசா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பாதாமை, தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். அதனுடன் கசகசா, பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, டேனிங் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவிவிடவும். இப்படி தினமுமோ, வாரம் ஒரு முறையோ செய்தால் சன் டேனுக்கு டாட்டா சொல்லலாம்.

முல்தானிமெட்டி மற்றும் கேரட் ஜீஸை சமஅளவில் எடுத்து, 10 சொட்டு எலுமிச்சைசாறு கலந்து, டேனிங்கான இடத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட்டால், சருமம் பழைய நிறத்தை அடைந்து பளபளப்பாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com