சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சாமை, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப்
Published on

சாமை அரிசி - கால் கப்,
நறுக்கிய கேரட் - 1,
பீன்ஸ் - 50 கிராம்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சைப் பட்டாணி  - கால் கப்,
பால் - கால் கப்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பல்,
புதினா, கொத்தமல்லி - கால் கப்,
சீரகம் - கால் தேக்கரண்டி,
மிளகுப் பொடி - ஒரு தேக்கரண்டி,
உப்பு, வெண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை சூடாக்கி, வெண்ணெய் போட்டு உருக்கியதும் அதில் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் சற்று வதங்கியதும் 5 டம்ளர் நீர் சேர்த்து (4 விசில்-10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில்) வேகவிட்டு இறக்கவும்.

குக்கர் விசில் போன பிறகு மூடியை திறந்து உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து கலக்கி, பரிமாறவும்.

சூப்பரான சாமை - காய்கறி சூப் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com