மொறுமொறு சாமையரிசி பொடி தோசை

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமையரிசியை வைத்து சூப்பரான சத்தான பொடி தோசை செய்து எப்படி என்று பார்க்கலாம்.
மொறுமொறு சாமையரிசி பொடி தோசை
Published on

சாமையரிசி - 500 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
இட்லி பொடி - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

அரிசி, உளுந்து, வெந்தயம் போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மென்மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த மாவில் உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதன் மேலே இட்லி பொடிய தூவி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான மொறுமொறு சாமையரிசி பொடி தோசை ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com