சத்தான காலை டிபன் சிவப்பு அரிசி ஊத்தப்பம்

வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சிவப்பு அரிசியில் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் சிவப்பு அரிசி ஊத்தப்பம்
Published on

சிவப்பு அரிசி - ஒரு கப்,
உளுந்து - கால் கப்,
வெங்காயம் - ஒன்று,
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

இரண்டும் நன்றாக ஊறியதும் அதை நன்றாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து கரைத்து ஒரு மணிநேரம் அப்படியே வைக்கவும்.

மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை கனமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும்.

சட்னியுடன் பரிமாறவும்.

சூப்பரான சத்தான சிவப்பு அரிசி ஊத்தப்பம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com