கேழ்வரகு - கோதுமை வெங்காய தோசை

சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு, கோதுமையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இது இரண்டையும் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கேழ்வரகு - கோதுமை வெங்காய தோசை
Published on

கேழ்வரகு மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு போட்டு அதனுடன் சீரகம், உப்பு, வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து, அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான கேழ்வரகு - கோதுமை வெங்காய தோசை ரெடி.

X

Maalai Malar
www.maalaimalar.com