சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை

அதிக சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு கேரட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை
Published on

கேழ்வரகு மாவு - 1 கப்,
தோசை மாவு - 2 கரண்டி,
தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
சீரகம் - சிறிதளவு,
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 1
கேரட் - 1
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட்டை துருவிக்கொள்ளவும்.

* ராகி மாவில் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, தாளித்த சீரகம், துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை 1 கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை ரெடி.

X

Maalai Malar
www.maalaimalar.com