முள்ளங்கி இறால் குழம்பு செய்வது எப்படி

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முள்ளங்கி வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முள்ளங்கி இறால் குழம்பு செய்வது எப்படி
Published on

இறால் - அரை கிலோ
முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தயிர் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி - சிறிய துண்டு துண்டு
பூண்டு - 4 பல்
கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை :

இறாலை நன்றாக சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகாயை கீறிக்கொள்ளவும்.

முள்ளங்கியை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி, கீறிய மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

அனைத்து நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலையும் சேர்த்து வதக்கவும்.

பின்னர் முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி நன்றாக வேக விடவும்.

தேவையான உப்பு, தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.

முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சூப்பரான முள்ளங்கி இறால் குழம்பு ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com