சப்பாத்திக்கு அருமையான இறால் கிரீன் மசாலா

நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் கிரீன் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இறால் கிரீன் மசாலா
இறால் கிரீன் மசாலா
Published on

தேவையான பொருட்கள் :

இறால் - கால் கிலோ

நறுக்கிய இஞ்சி - சிறிதளவு

பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)

நறுக்கிய பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - கால் டீஸ்பூன்

தேங்காய் பால் - கால் கப்

எலுமிச்சை சாறு - சிறிதளவு

தண்ணீர் - 2 கப்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

புதினா - 1 கட்டு

கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி

செய்முறை:

இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து ஊறவைத்துக்கொள்ளவும்.

மிக்சியில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி தழை, மிளகாய், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் போன்றவற்றை கொட்டி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.

அதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த கலவையை கொட்டி கிளறவும்.

பின்னர் அடுப்பை சிறுதீயில் வைத்துவிட்டு தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.

நன்கு கொதிக்க தொடங்கியதும் இறால் கலவையை கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வரும் வரை வேகவைத்துவிட்டு இறக்கி பரிமாறலாம்.

சுவையான இறால் கிரீன் மசாலா ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com