சத்தான சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோசை

கோதுமை தோசை செய்யும் போது அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
சத்தான சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோசை
Published on

உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
கோதுமை மாவு - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து வெந்ததும் தோலை நீக்கி விட்டு துருவிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

*  தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com