

உருளைக்கிழங்கு - 250 கிராம்,
கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
நெய் - 3 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, நெய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு கார முறுக்கு ரெடி.