சத்தான காலை டிபன் கம்பு - பச்சைப்பயறு புட்டு

கம்பு, பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ள. இது இரண்டையும் வைத்து சத்தான டிபன் கம்பு - பச்சைப்பயறு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் கம்பு - பச்சைப்பயறு புட்டு
Published on

கம்பு மாவு - ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
தேங்காய்த்துருவல் - அரை கப்,
நெய் - ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.

* கம்பு மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.

* புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, தேங்காய்த்துருவல் என்றபடி அடுத்தடுத்து அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு - பச்சைப்பயறு புட்டு தயார்.

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த உணவு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com