பப்பாளி - முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று பப்பாளி, முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Published on

தேவையான பொருட்கள் : 

பப்பாளி - ஒன்று , 

முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், 

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், 

பச்சை மிளகாய் - 2, 

இஞ்சி - சிறிய துண்டு, 

கொத்தமல்லி - சிறிதளவு,  

தேன் - 2 டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

பப்பாளியை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முளைகட்டிய பச்சைப் பயறை இட்லி குக்கரில் வேக வைத்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் தேன், பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். 

பின்னர் இதனுடன் பப்பாளி மற்றும் வேக வைத்த பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.

சத்தான பப்பாளி - முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com