

ஓட்ஸ் - 1 கப்
கோதுமை ரவை - 1/4 கப்
கடலைமாவு - 1/4 கப்
மோர் - (கரைப்பதற்கு தேவையான அளவு)
கேரட் - 1
முட்டைகோஸ் - சிறிய துண்டு
குடைமிளகாய் - பாதி
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்.
செய்முறை :
முதலில் ஓட்ஸையும், கோதுமை ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.
கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை ரவை, கடலை மாவு போட்டு அதனுடன் உப்பு போட்டு கலக்கவும்.
அதனுடன் மோர் விட்டு கட்டி இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
அதில் பொடித்த மிளகு, சீரகம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து கலக்கவும். மாவை ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ரெடி.
இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.