பெண்கள் ஏன் பூ சூடிக்கொள்கிறார்கள்....

பெண்கள் பூ சூடும்போது நேர்மறையான ஆற்றலை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Why Women Wear Flowers
Published on: 
Summary

நமது பாரம்பரியத்தில் பெண்கள் தலைநிறைய பூச் சூடிக் கொள்வது என்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, அதக்குப் பின்னால் ஆழமான அறிவியல் மற்றும் ஆரோக்கியக் காரணங்களும் ஒளிந்துள்ளன.

கூந்தல் ஆரோக்கியம் மற்றும் இயற்கை வாசனை

பூக்களில் உள்ள இயற்கை எண்ணெய்கள் தலைமுடிக்குச் சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கின்றன. மல்லிகை, முல்லை போன்ற மலர்களைச் சூடும்போது, அவை கூந்தலுக்குச் செயற்கை இரசாயனங்கள் இல்லாத இயற்கை நறுமணத்தைத் தருகின்றன. இது கூந்தலின் துர்நாற்றத்தைப் போக்கி, நாள் முழுதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் நறுமண சிகிச்சை

பூக்களிலிருந்து வெளிவரும் நறுமணம் மூளையில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மனதை அமைதிப்படுத்துகிறது. குறிப்பாக மல்லிகைப் பூவின் வாசனை, பெண்களின் அன்றாட வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் மற்றும் சோர்வை நீக்கி, மனநிலையை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்றும் வல்லமை கொண்டது.

உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆயுர்வேத ரகசியம்

பெண்களின் உடல்நிலை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் சில நேரங்களில் உடல் வெப்பம் அதிகரிக்கும். மல்லிகை மற்றும் இருவாட்சி போன்ற பூக்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை.

இவற்றைத் தலையில் சூடும்போது, அவை உச்சந்தலையைத் குளிர்வித்து, கண் எரிச்சல் மற்றும் உடல் சூட்டைக் குறைக்க உதவுகின்றன.

முகப்பொலிவை அதிகரிக்கும் வண்ணங்கள்

தலையில் சூடும் பிரகாசமான வண்ண மலர்கள் பெண்களின் முகத்திற்கு ஒரு தனித்துவமான குளோ மற்றும் கவர்ச்சியைக் கொடுக்கின்றன. கூந்தலின் கருமைக்கும், பூக்களின் நிறத்திற்கும் இடையே உள்ள முரண் முக அமைப்பை மேலும் எடுப்பாகக் காட்டுகிறது.

ஹார்மோன் சமநிலை மற்றும் நேர்மறை ஆற்றல்

தலையின் பின் பகுதியில் பூக்களைச் சூடும்போது, அது குறிப்பிட்ட நரம்புப் புள்ளிகளைத் தூண்டி ஹார்மோன் சுரப்பைச் சீராக்க உதவுகிறது. மலர்களின் வாசனையும் அழகும் பெண்களைச் சுற்றிலும் ஒரு நேர்மறையான ஆற்றலை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

X