மேக்கப் ரிமூவ் பண்ணாம தூங்குறீங்களா? அப்போ இதை மறந்திடாதீங்க!

வெறும் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவினால் மேக்கப் முழுமையாக நீங்காது.
Skincare, BeautyTips
Published on

பண்டிகை காலங்கள், சுபவிசேஷங்கள் அல்லது பார்ட்டிகளுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும்போது, நாம் செய்யும் மிகப்பெரிய தவறு மேக்கப்பைக் கலைக்காமல் அப்படியே தூங்குவதுதான்.

"ரொம்ப டயர்டா இருக்கு, நாளைக்குக் காலைல பாத்துக்கலாம்" என்று நாம் காட்டும் அலட்சியம், நமது சருமத்திற்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கிவிடும்.

மேக்கப்போடு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்..

பகல் முழுக்க காற்றில் இருக்கும் அழுக்குகள், புகை மற்றும் முகத்தில் சுரக்கும் எண்ணெய் ஆகியவை நாம் போட்டுள்ள மேக்கப் லேயர்களோடு ஒன்றிணைந்துவிடும். இதோடு அப்படியே தூங்கும்போது சருமத் துளைகள் அடைபட்டு, தோல் சுவாசிக்க முடியாமல் திணறும். இது அடுத்த நாளே முகத்தில் கொத்து கொத்தாகப் பருக்கள் வர வழிவகுக்கும்.

மேலும், கண்களில் இருக்கும் காஜல், மஸ்காரா போன்றவற்றோடு தூங்கும்போது கண் எரிச்சல் மற்றும் அலர்ஜி ஏற்படும். உதட்டில் இருக்கும் கெமிக்கல் லிப்ஸ்டிக்குகள் உதட்டின் ஈரப்பதத்தை உறிஞ்சி, உதட்டைக் கறுப்பாகவும் வறட்சியாகவும் மாற்றிவிடும்.

டபுள் க்ளென்சிங்..

வெறும் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவினால் மேக்கப் முழுமையாக நீங்காது. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது மைசெல்லார் வாட்டர் பயன்படுத்திப் பஞ்சால் மேக்கப்பை மென்மையாகத் துடைத்து எடுக்க வேண்டும்.

அதன் பிறகு, உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

ஃபேஸ்மாஸ்க் மற்றும் மாய்ச்சுரைசர்..

என்னதான் முகத்தை கழுவி சுத்தம் செய்தாலும் அது சருமத்தின் ஆழம் வரை செல்வதில்லை. எனவே,மேக்கப்பை நீக்கிய பின்பு சருமத்திற்கு ஊட்டமளிக்க ஃபேஸ்மாஸ்க் அல்லது ஃபேஸ்பேக் பயன்படுத்த வேண்டும்.

இது முகத்தின் வீக்கத்தைக் குறைத்து ஆழமான ஈரப்பதத்தை அளிக்கும். மாஸ்க் நீக்கிய பின் மறக்காமல் ஒரு நல்ல மாய்ச்சுரைசர் அல்லது அலோவேரா ஜெல் தடவிக் கொண்டால் கூலிங்காகவும் இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com