உங்க முக அமைப்பிற்கு எந்த Hair Style கச்சிதமாக இருக்கும் - னு தெரியலையா?

பெண்களுக்கு அழகே ஆடையும், நம் ஹேர்ஸ்டைல்ஸ் தான்.
Fashion Hair cut
Published on: 
Summary

ஒருவருடைய அழகையும் தோற்றத்தையும் உடனடியாக மாற்றியமைக்கும் சக்தி ஹேர்ஸ்டைலுக்கு உண்டு. என்னதான் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தாலும், முகத்திற்குப் பொருத்தமில்லாத ஹேர்ஸ்டைல் ஒட்டுமொத்த தோற்றத்தையும் கெடுத்துவிடும். உங்களுடைய முக அமைப்புக்கு எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும் என்பதில் குழப்பமா? அப்போ இது உங்களுக்கு...

வட்ட வடிவ முகம்

வட்ட வடிவ முகம் கொண்டவர்களுக்குக் கன்னங்கள் சற்று சப்பையாகவும், நீளமும் அகலமும் சமமாகவும் இருக்கும். இந்த முக அமைப்பு உள்ளவர்கள், முகத்தை சற்றே நீளமாகக் காட்டக்கூடிய ஹேர்ஸ்டைல்களை தேர்வு செய்ய வேண்டும்.

பொருத்தமான ஸ்டைல்: பக்கவாட்டில் எடுக்கப்படும் சைடு பார்ட்டிஷன் , லேயர் கட் அல்லது முடியின் மேல் பகுதியில் அதிக வால்யூம் கொடுக்கும் ஹேர்ஸ்டைல்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.

ஓவல் வடிவ முகம்

உலகளவில் மிகச் சரியான மற்றும் அதிர்ஷ்டகரமான முக அமைப்பாக ஓவல் கருதப்படுகிறது. இந்த முக அமைப்பு உள்ளவர்களுக்கு நெற்றியை விடக் தாடைப் பகுதி சற்றே குறுகலாக இருக்கும்.

பொருத்தமான ஸ்டைல்: இந்த முக அமைப்பு கொண்டவர்களுக்குப் பிக்ஸி கட் , லாங் வேவ்ஸ் , போனிடெய்ல் எனப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஹேர்ஸ்டைல்களுமே கச்சிதமாகப் பொருந்தும்.

சதுர வடிவ முகம்

சதுர வடிவ முகம் கொண்டவர்களுக்கு நெற்றி, கன்னங்கள் மற்றும் தாடை ஆகிய மூன்றுமே சமமான அகலத்தில், கூர்மையான கோணங்களுடன் இருக்கும்.

பொருத்தமான ஸ்டைல்: கூர்மையான தாடை அமைப்பை மென்மையாகக் காட்ட சுருள் முடி, மென்மையான அலை அலையான லாங் லேயர்ஸ் மற்றும் சைடு ஸ்வெப்ட் பேங்க்ஸ் ஸ்டைல்கள் பொருத்தமாக இருக்கும்.

இதய வடிவ முகம்

இதய வடிவ முகம் கொண்டவர்களுக்கு நெற்றிப் பகுதி அகலமாகவும், கன்ன எலும்புகள் எடுப்பாகவும், தாடைப் பகுதி மிகவும் குறுகலாகவும் கூர்மையாகவும் இருக்கும்.

பொருத்தமான ஸ்டைல்: நெற்றியின் அகலத்தைக் குறைத்துக் காட்டக் கூடிய சைடு பேங்க்ஸ் , தோள்பட்டை வரை உள்ள பாப் கட் அல்லது கீழ் பகுதியில் அதிக சுருள் கொண்ட ஹேர்ஸ்டைல்கள் இவர்களுக்கு அழகைக் கூட்டும்.

நீள்வட்ட வடிவ முகம்

இந்த முக அமைப்பு கொண்டவர்களுக்கு அகலத்தை விட முகத்தின் நீளம் மிக அதிகமாகக் காணப்படும். இவர்களது நோக்கம் முகத்தின் நீளத்தைக் குறைத்து, அகலத்தைக் கூட்டுவதாக இருக்க வேண்டும்.

பொருத்தமான ஸ்டைல்: நெற்றியை மறைக்கும் ஃபிரண்ட் பிரின்ஜஸ் , ஷார்ட் பாப் மற்றும் காதுகளுக்குப் பக்கவாட்டில் அதிக வால்யூம் தரும் ஹேர்ஸ்டைல்கள் முகத்தை அழகாகக் காட்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com