கண்களுக்கு காஜல் பூசினால் Smudge ஆகிவிடுகிறதா? இனி கவலையே வேண்டாம்!

வாட்டர்-புரூஃப் மற்றும் ஸ்மட்ஜ்-புரூஃப் சான்றிதழ் பெற்ற தரமான பிராண்டட் காஜல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Eye Makeup
Published on: 
Summary

கண்களுக்கு அழகூட்டுவதில் காஜல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பலருக்கு காஜல் பூசிய சில மணி நேரங்களிலேயே அது கண்களைச் சுற்றி படர்ந்து, முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்! காஜல் கலையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்க வேண்டுமா?...

கண்களைச் சுற்றியுள்ள எண்ணெய்ப் பசையை நீக்குங்கள்

காஜல் கலைவதற்கு மிக முக்கிய காரணம் கண்களைச் சுற்றியுள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசைதான். காஜல் பூசுவதற்கு முன்பு, முகத்தைக் குளிர்ந்த நீரால் நன்றாகக் கழுவித் துடைக்க வேண்டும்.

பின்னர், ஒரு சிறிய ஐஸ் கட்டியைக் துணியில் கட்டி கண்களைச் சுற்றி ஒத்தி எடுத்தால், எண்ணெய்ப் பசை நீங்கி காஜல் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

மேக்கப் பிரைமர் அல்லது கன்சீலர் பயன்படுத்துங்கள்

முகத்திற்கு மேக்கப் போடுவது போல, கண்களுக்கும் அடிப்படைத் தயாரிப்பு அவசியம். காஜல் வைப்பதற்கு முன்பு, கண்களின் கீழ் பகுதியில் சிறிதளவு பிரைமர் அல்லது கன்சீலரை தடவி நன்றாகக் கலக்க வேண்டும்.

இது காஜல் சருமத்திற்குள் ஊடுருவிப் படர்வதைத் தடுத்து, ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படும்.

பவுடர் மேஜிக்

காஜல் பூசி முடித்தவுடன், ஒரு சிறிய பிரஷ்ஷைக் கொண்டு லூஸ் பவுடர் அல்லது காம்பாக்ட் பவுடரை கண்களின் கீழ் லேசாகத் தட்ட வேண்டும்.

இது காஜலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை 'மேட்' பொலிவாக மாற்றும். இதனால் காஜல் பல மணி நேரத்திற்குச் சிறிதும் நகராமல் அப்படியே இருக்கும்.

ஐ ஷேடோ கொண்டு லாக் செய்யுங்கள்

உங்கள் காஜல் கறுப்பு நிறத்தில் இருந்தால், காஜல் பூசிய பிறகு ஒரு மெல்லிய பிரஷ்ஷால் கறுப்பு நிற மேட் ஐ ஷேடோவை எடுத்து, காஜலின் கீழ் வரியின் மீது லேசாகத் தடவ வேண்டும்.

இந்த 'ஸ்மட்ஜ்-புரூஃப்' நுட்பம், காஜல் உருகி வெளியேயோ அல்லது கீழ் நோக்கியோ பரவாமல் லாக் செய்துவிடும்.

கண்களின் வெளிப்பகுதியைத் தவிருங்கள்

காஜல் வைக்கும் போது கண்களின் உள்பகுதியில் மட்டும் வைப்பது நல்லது. கண்களின் இரு ஓரங்களின் வெளிப்பகுதிகளிலும் காஜலை அதிகமாகத் தடவக் கூடாது.

ஏனெனில், நம் கண்களில் சுரக்கும் கண்ணீர் அல்லது ஈரப்பதம் இந்த ஓரங்கள் வழியாக வெளிவரும் போது காஜலை எளிதாகக் கலைத்துவிடும்.

தரமான மற்றும் வாட்டர்-புரூஃப் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுங்கள்

சந்தையில் கிடைக்கும் மலிவான காஜல்களைத் தவிர்த்துவிட்டு, நீண்ட நேரம் நீடிக்கும், வாட்டர்-புரூஃப் மற்றும் ஸ்மட்ஜ்-புரூஃப் சான்றிதழ் பெற்ற தரமான பிராண்டட் காஜல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இது கண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது, அழகையும் நாள் முழுவதும் சிதையாமல் பாதுகாக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com