முகத்திற்கு அழகு சேர்க்கும் லிப்ஸ்...- மேக்அப் ட்ரிக்

அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.
முகத்திற்கு அழகு சேர்க்கும் லிப்ஸ்...- மேக்அப் ட்ரிக்
Published on: 

நீங்கள் இப்போது தான் மேக்கப் போட கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த டிப்ஸ்கள் மிக உதவியாக இருக்கும். உங்களை அழகுபடுத்திக் கொள்ள...

நீங்கள் விரும்பும் அழகிய உதடுகள் சில நொடிகளில் இந்த மேக்அப் ட்ரிக் மூலம் பெற்றுவிடலாம்.

* சுத்தமான மாய்ஸ்சுரைஸ் செய்யப்பட்ட முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஃபவுண்டேஷனை பூசவும்.

* சுத்தமான பிரஷ் மூலம் பிளெண்ட் செய்து விடவும்.

* முகத்தில் இருக்கும் மாசுமருக்களை மற்றும் கருவளையத்தை மறைக்க முகத்தில் கன்சீலரை பூசவும்.

* ஐஷாடோவை கண்ணிமைகளில் பூசவும்.

* உங்கள் உதட்டின் இயற்கையான நிறத்தை விட ஒரு ஷேட் அடர்த்தியான நிறத்தில் லிப் பென்சிலை பயன்படுத்தி உதட்டில் கோடை வரையவும். உங்கள் உதட்டின் வெளிப்புற லைனில் லிப் லைனரை பயன்படுத்தவும்.

* அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.

* சிறிது ஹை லைட்டரை உங்கள் உதட்டின் நடுவே பயன்படுத்தவும்.

உதட்டிற்கு மேலும் அழகேற்ற...

* உதட்டில் கொஞ்சம் ஃபவுண் டேஷன் இட்டு, சருமத்துடன் கலக்கச் செய்யுங்கள்.

* உதட்டைச் சுற்றி பவழ லிப் லைனரால் கோடு வரையுங்கள்.

* அதே லைனர் கொண்டு உதட்டின் உள்புறமும் நிரப்புங்கள்.

* உதட்டின் உள்ளே பவழ லிப்ஸ்டிக்கை இடுங்கள்.

* திஷ்யு பேப்பர் கொண்டு துடைத்து, மீண்டும் இடுங்கள். இதன்மூலம் உதட்டுச்சாயம் நீண்ட நேரத்துக்கு இருக்கும்.

மேட் லுக்குக்கு 5வது ஸ்டெப் உடன் நிறுத்தவும். பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com