முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளிதாக நீக்கணுமா? அப்போ வீட்டிலேயே 'இதை' செய்யுங்க போதும்!

முகத்திற்கு போடும் முன் சிறிதளவு பேட்ஸ் டெஸ்ட் செய்து விட்டு பயன்படுத்த வேண்டும்.
Facial Hair Removal
Published on

முகத்து முடிகளை நீக்க ரசாயன க்ரீம்கள் அல்லது த்ரெட்டிங் போன்ற வலிகள் மிகுந்த வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, சமையலறையிலேயே கிடைக்கக்கூடிய இயற்கை பொருட்களைக் கொண்டு எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி முகத்தைப் பளபளப்பாக மாற்றலாம்.

Facial Hair Removal

முட்டையின் வெள்ளைக்கரு மாஸ்க்

முட்டையின் வெள்ளைக்கரு - 1, சோளமாவு - 1 ஸ்பூன், சர்க்கரை - 1 ஸ்பூன் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் சோளமாவு மற்றும் சர்க்கரையைச் சேர்த்து கட்டியாகும் வரை நன்றாகக் கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் தடவவும்.

20 முதல் 25 நிமிடங்கள் கழித்து மாஸ்க் நன்றாகக் காய்ந்ததும், அதனை மேல்நோக்கிய திசையில் மெதுவாகப் பிரித்து எடுக்க வேண்டும். இது முகத்தில் உள்ள மெல்லிய முடிகளை வேரோடு இழுத்து வந்துவிடும்.

Facial Hair Removal

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் ஸ்க்ரப்

தேவையான அளவு ஓட்ஸ் பொடி , நன்கு பழுத்த வாழைப்பழம் - பாதி எடுத்துக்கொள்ளவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் ஓட்ஸ் பொடியைச் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் தடவி, வட்ட வடிவில் 15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். ஓட்ஸ் சருமத்தை மென்மையாக ஸ்க்ரப் செய்து முடிகளின் வேர்களைத் தளர்த்தும்.

வாழைப்பழம் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்து வர முடிகள் உதிரும்.

Facial Hair Removal

உளுந்த மாவு மற்றும் பால் பேஸ்ட்

உளுந்த மாவு - 2 ஸ்பூன், காய்ச்சாத பசும்பால் - தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

உளுந்த மாவுடன் பாலைக் கலந்து கெட்டியான பேஸ்ட்டாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதை முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும் பகுதிகளில் தடிமனாகத் தடவ வேண்டும்.

இந்த மாஸ்க் அரை வேக்காடாகக் காய்ந்திருக்கும் போதே, விரல்களால் முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் நன்றாகத் தேய்த்து எடுக்க வேண்டும். உளுந்துக்கு முடிகளை உதிர்க்கும் அசாத்திய சக்தி உண்டு.

Facial Hair Removal

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலவை

சுத்தமான தேன் - 2 ஸ்பூன், புதிய எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான அளவு சுத்தமான தேன் மற்றும் புதிய எலுமிச்சை சாறு சிறுதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து, முகத்தில் முடிகள் உள்ள பகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும்.

பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் முடியின் நிறத்தை பொன்னிறமாக மாற்றி முகத்தோடு ஒன்றச் செய்யும், தேன் முடியின் அடர்த்தியைக் குறைக்கும்.

Facial Hair Removal

புதினா தேநீர் வைத்தியம்

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி, தண்ணீர் - 1 கிளாஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

தண்ணீரில் புதினா இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு தேநீராக தினமும் குடித்து வர வேண்டும்.பெண்களின் முகத்தில் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவே அதிக முடிகள் வளர்கின்றன.

புதினா தேநீர் உடலில் உள்ள ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்தி, முகத்தில் புதிய முடிகள் முளைப்பதைத் தடுக்கிறது.

Facial Hair Removal

முக்கிய குறிப்பு:

இவற்றை அனைத்தையுமே முகத்திற்கு போடும் முன் சிறிதளவு பேட்ஸ் டெஸ்ட் செய்து விட்டு பிறகு முகத்தில் தாராளமாக பயன்படுத்தலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com