கண்களின் சோர்வை நீக்கும் 'ஃப்ளர்ட்டி ஐஸ்' உடற்பயிற்சி!

கண் குறைபாடுகள் இருந்தால், கண் மருத்துவரை ஆலோசித்த பிறகே இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
Eye Exercise
Published on: 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கணினி, மொபைல் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதால் பலருக்கும் கண் சோர்வு மற்றும் கண்கள் வறண்டு போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைப் போக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள 'ஃப்ளர்ட்டி ஐஸ்' கண் உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

Eye Exercise

ஃப்ளர்ட்டி ஐஸ்' பயிற்சி என்றால் என்ன?

இது கண்களின் தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு எளிய யோகா பயிற்சியாகும். உங்கள் தலையை அசைக்காமல், கண்களை மட்டும் இடமிருந்தும் வலமாகவும், மேலிருந்து கீழாகவும் வேகமாக அசைப்பதே இப்பயிற்சியின் அடிப்படை. பார்ப்பதற்கு கண்சிமிட்டுவது போலத் தெரிவதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் கண் தசைகளின் இறுக்கத்தை இது உடனடியாகக் குறைக்கிறது.

Eye Exercise

இப்பயிற்சியை எப்படிச் செய்வது?

முதலில் நேராக நிமிர்ந்து அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்து உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். தலையை நேராக வைத்துக்கொண்டு, உங்கள் கண்களை மட்டும் இடதுபுறம் தீவிரமாகப் பாருங்கள், பின்னர் உடனடியாக வலதுபுறம் திருப்புங்கள்.

இதேபோல் கண்களை மேலேயும், கீழேயும் வேகமாக அசைக்க வேண்டும். இந்த அசைவுகளைத் தொடர்ந்து 30 முதல் 60 நொடிகள் வரை வேகமாகச் செய்ய வேண்டும்.

பயிற்சி முடிந்ததும் கண்களை மூடி, உள்ளங்கைகளை ஒன்றாகத் தேய்த்து வரும் மிதமான சூட்டை மூடிய கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

Eye Exercise

கண்களுக்குக் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

கண்களை வேகமாக அசைக்கும்போது, கண் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகிறது. வேகமாக கண் சிமிட்டுவதாலும் அசைப்பதாலும், கண்கள் இயற்கையாகவே ஈரப்பதமடைகின்றன .

இதனால் கண் எரிச்சல் குறையும். நீண்ட நேரம் ஒரே இடத்தை (திரையை) பார்ப்பதால் ஏற்படும் 'டிஜிட்டல் கண் சோர்வு'உடனடியாக நீங்குகிறது.

Eye Exercise

வேலை நேர இடைவெளிகளில் செய்ய உகந்தது

மென்பொருள் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்தில் கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த 'ஃப்ளர்ட்டி ஐஸ்' பயிற்சியைச் செய்யலாம்.

இதற்கு எவ்வித உபகரணங்களும் தேவையில்லை என்பதால், அமர்ந்த இடத்திலேயே வெறும் ஒரு நிமிடத்தில் இதைச் செய்து கண்களைப் பாதுகாக்க முடியும்.

Eye Exercise

யாரெல்லாம் செய்யக்கூடாது?

கண்களில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், தீவிரமான கண் அழுத்த நோய் அல்லது விழித்திரை பிரச்சனைகள் உள்ளவர்கள் இப்பயிற்சியைத் தன்னிச்சையாகச் செய்யக் கூடாது. ஏதேனும் கடுமையான கண் குறைபாடுகள் இருந்தால், கண் மருத்துவரை ஆலோசித்த பிறகே இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com