Office-ல இருந்து Function வரை - உங்களை அழகாக்கும் Trendy Bun Hairstyles!

பெண்களுக்கு பிடித்த easy&stylish ஹேர் ஸ்டைல்ஸ்.
Bun Hair Styles
Published on
Summary

நம்மில் பலருக்கு அலுவலகம், கல்லூரி அல்லது சுபநிகழ்ச்சிகள் என்று எந்த இடத்திற்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் போடா வேண்டும் என்று குழப்பமாக இருக்கும். இனி அந்த குழப்பமே வேண்டாம்.

Casual Messy Bun

கேஷுவல் மெஸ்ஸி பன் (Casual Messy Bun)

இன்றைய தலைமுறை பெண்களின் ஃபேவரிட் ஸ்டைல் இது. தலைமுடியை சீவாமல், கைகளாலேயே உயரமாக அள்ளி முடிந்து ஒரு ரப்பர் பேண்ட் போட வேண்டும். பின்னர் கொண்டையிலிருந்து சில முடி இழைகளை லேசாக வெளியே இழுத்துவிட்டால், ஸ்டைலான மெஸ்ஸி பன் தயார். இது ஜீன்ஸ், குர்தி போன்ற கேஷுவல் ஆடைகளுக்கு மிக அழகாக இருக்கும்.

Classic Low Bun

கிளாசிக் லோ பன் (Classic Low Bun)

அலுவலகம் அல்லது நேர்காணல்களுக்குச் செல்லும்போது ஒரு முறையான தோற்றம் கிடைக்க இது உதவும். தலைமுடியை நடுவிலோ அல்லது பக்கவாட்டிலோ சீராக வகுடு எடுத்து, கழுத்துக்கு அருகில் தாழ்வாக முடிந்து, பின் அதை சுருட்டி கொண்டையாக வைக்க வேண்டும். இது ஒரு நேர்த்தியான தோற்றத்தைத் தரும்.

Trendy High Donut Bun

ட்ரெண்டி ஹை டோனட் பன் (Trendy High Donut Bun)

உயரமாகப் போடப்படும் இந்த கொண்டை உங்களை சற்று உயரமாகவும், கம்பீரமாகவும் காட்டும். டோனட் பேண்ட் பயன்படுத்தி, தலைமுடியை உச்சிக்குக் கொண்டு சென்று வட்ட வடிவில் சுருட்டி ஹேர் பின்னால் லாக் செய்ய வேண்டும். பார்ட்டி மற்றும் வெஸ்டர்ன் ஆடைகளுக்கு இது கச்சிதமான சாய்ஸ்.

Traditional Gajra Bun

ட்ரெடிஷனல் கஜரா பன் (Traditional Gajra Bun)

பண்டிகைகள் மற்றும் திருமண விசேஷங்களில் புடவை கட்டும்போது இந்த ஸ்டைல் அன்றும் இன்றும் எவர்கிரீன். தலைமுடியை சாதாரணமாக மிடில் பன் ஆக மாற்றி, அதைச் சுற்றி மல்லிகைப் பூ அல்லது ரோஜாப்பூ வைத்தால் போதும். பாரம்பரியமான லுக் உங்களைத் தனித்துக் காட்டும். இது டிரெடிஷனல் லுக்கை தரும் சற்றும் அழகும் கூடுதலாக தெரிவீர்கள்.

Elegant French Twist)

மென்மையான பிரெஞ்சு ட்விஸ்ட் (Elegant French Twist)

இது பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாகத் தெரிந்தாலும் செய்வது மிக எளிது. தலைமுடியை ஒரு பக்கமாகச் சேர்த்து, மேல்நோக்கி லேசாக முறுக்கி, கொண்டை ஊசிகளால் தலையோடு இறுக்கி சொருக வேண்டும். இது சுடிதார் மற்றும் கவுன் போன்ற ஆடைகளுக்கு ராயல் லுக் கொடுக்கும்.

Braided Bun For Long' Hair

பிரைடட் பன் ஸ்டைல் (Braided Bun For Long' Hair)

நீளமான கூந்தல் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தலைமுடியை முதலில் சாதாரணமாக ஜடை பின்னி, அதன் பிறகு அந்த ஜடையைச் சுருட்டி கொண்டையாக மாற்றி பின் செய்ய வேண்டும். நாள் முழுவதும் கலைந்து போகாமல், தலைமுடி பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்க இந்த ஸ்டைல் உதவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com