உங்கள் முகத்தில் தேவையற்ற முடி இருக்கிறதா? பாதுகாப்பான முறையில் அதை நீக்க வேண்டுமா?

முடி எடுத்தவுடன் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து, மாஸ்சரைஸர், கற்றாழை ஜெல் தடவுவது அவசியம்
Unwanted Hair Removel
Unwanted Hair for face
Published on

பெண்களுக்கு முகத்தில் லேசான முடி வளர்ச்சி இருப்பது இயற்கையான ஒன்றுதான்.

இருப்பினும், ஹார்மோன் மாறுபாடுகள் காரணமாக சிலருக்கு மேல் உதடு, தாடை மற்றும் கன்னப் பகுதிகளில் முடிகள் அடர்த்தியாக வளர்கின்றன.

இதனைப் பாதுகாப்பான முறையில் நீக்கி, முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம்.

Unwanted Hair Removel
Unwanted Hair for face

ஃபேஷியல் ரேசர்:

தற்போது பெண்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் எளிய வழிமுறை இதுவாகும்.

முகத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய ரேசர்களைப் பயன்படுத்தி மிக எளிதாக முடிகளை நீக்கலாம்.

முகத்தைக் கழுவி, கற்றாழை ஜெல் அல்லது மாஸ்சரைஸர் தடவி, முடியின் வளர்ச்சி இருக்கும் திசையிலேயே மெதுவாக ரேசர் மூலம் எடுக்க வேண்டும். வலியே இருக்காது. உடனடியாகச் செய்துவிடலாம்.

Unwanted Hair Removel
Unwanted Hair for face

த்ரெட்டிங்:

பாரம்பரியமாக பியூட்டி பார்லர்களில் செய்யப்படும் ஒரு பாதுகாப்பான வழிமுறை இதுவாகும். காட்டன் நூலைப் பயன்படுத்தி, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடிகள் இழுத்து நீக்கப்படும். மேல் உதடு மற்றும் புருவங்களை துல்லியமாக வடிவமைக்க இதுவே சிறந்த வழி.

லேசர் சிகிச்சை:

முகத்தில் முடி வளர்ச்சி மிக அதிகமாக உள்ளவர்கள், தோல் மருத்துவரை அணுகி நிரந்தரத் தீர்வாக லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

சில அமர்வுகளுக்குப் பிறகு, முகத்தில் முடி வளர்ச்சி முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். இது நிரந்தரமாக முடி வளர்வதை தடுக்கும் என்பதை சொல்ல முடியாது.

Unwanted Hair Removel
Unwanted Hair for face

ஃபேஸ் வேக்ஸிங்:

முகத்திற்கான பிரத்யேக வேக்ஸ் ஸ்ட்ரிப்களை கடைகளில் வாங்கி நாமே வீட்டிலும் செய்யலாம் அல்லது பார்லரிலும் செய்து கொள்ளலாம்.

வெதுவெதுப்பான மெழுகை முகத்தில் தடவி, ஸ்ட்ரிப் கொண்டு முடியின் வளர்ச்சிக்கு எதிர் திசையில் இழுக்க வேண்டும்.

முடிகள் வேரோடு நீக்கப்படுவதால், அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்கு முடி வளராது. புதிய முடிகள் மென்மையாக வளரும். இதை பேட்ஸ் டெஸ்ட் செய்து விட்டு உபயோகிக்க வேண்டும்.

Unwanted Hair Removel
Unwanted Hair for face

எபிலேட்டர்:

இது மின்சாரத்தால் இயங்கும் ஒரு சிறிய கருவியாகும்.பல முடிகளை ஒரே நேரத்தில் வேரோடு பிடுங்கி எடுக்கும் தொழில்நுட்பம் கொண்டது.

அடிக்கடி பார்லர் செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே எளிதாகச் செய்யலாம். ஆனால் இதை மிகவும் கவனமாக உபயோகிக்க வேண்டும்.

உபயோகிப்பதற்கு முன்பு இந்த கருவியை உபயோகித்தவர்களிடம் ஆலோசனை கேட்டு பிறகு பயன்படுத்தி வந்தால் நல்லது.

Unwanted Hair Removel
Unwanted Hair for face

முக்கிய எச்சரிக்கை:

முடிகளை நீக்கிய பிறகு, சிலருக்கு முகத்தில் லேசான சிவப்புத் தன்மை அல்லது எரிச்சல் ஏற்படலாம்.

எனவே, முடி எடுத்தவுடன் முகத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து, ஒரு நல்ல மாஸ்சரைஸர் அல்லது கற்றாழை ஜெல் தடவுவது மிகவும் அவசியமாகும்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பின்பு உபயோகிக்க வேண்டும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com