

இன்றைய நவீன உலகில், தங்களுக்குப் பிடித்த நிறங்களில் ஹேர் கலரிங் செய்வது பெண்கள் மத்தியில் ஒரு முக்கிய ஃபேஷன் அங்கமாக மாறிவிட்டது. ஆனால், பலருக்கு ஹேர் கலரிங் செய்த சில வாரங்களிலேயே நிறம் மங்கி, கூந்தல் வறண்டு, பொலிவிழந்து விடுகிறது. இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்! நீங்கள் செய்த ஹேர் கலர் நீண்ட நாட்கள் கலையாமல், கூந்தல் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இதோ...
ஹேர் கலரிங் செய்ய முடிவெடுத்தவுடன் பலரும் செய்யும் தவறு, ட்ரெண்டில் இருக்கும் ஏதேனும் ஒரு நிறத்தை அப்படியே தேர்ந்தெடுப்பதுதான். அது உங்கள் முகத்தின் அழகையே மாற்றிவிடக்கூடும்.
காம்பளக்ஷன் எனப்படும் உங்களது சரும நிறத்திற்கு எந்த நிறம் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுப்பது அவசியம். முதன்முறையாக கலரிங் செய்யும்போது, தலைமுடி முழுவதும் செய்யாமல் சில பகுதிகளுக்கு மட்டும் 'ஹைலைட்ஸ்' செய்து பார்ப்பது பாதுகாப்பானது.
சந்தையில் கிடைக்கும் மலிவான மற்றும் தரம் குறைந்த ஹேர் கலர்களைத் தவிர்த்துவிட வேண்டும். எப்போதும் அமோனியா இல்லாத தரமான பிராண்டட் ஹேர் கலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது முடியின் வேர்க்கால்களைப் பாதுகாப்பதோடு, கூந்தலின் இயற்கையான ஈரப்பதத்தையும் தக்கவைக்கும்.
ஹேர் கலரிங் செய்த பிறகு, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சாதாரண ஷாம்புகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.
சாயம் பூசப்பட்ட கூந்தலுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் 'கலர் ப்ரொடெக்ட்' ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது ஹேர் கலர் சீக்கிரமாக வெளுத்துப் போவதைத் தடுத்து, நிறத்தை நீண்ட நாட்கள் லாக் செய்து வைக்கும்.
ஹேர் கலர் நீண்ட நாட்கள் உதிராமல் பிரகாசமாக இருக்க, தலைமுடியை அதிக சூடான நீரில் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், வெந்நீர் முடியின் கியூட்டிக்கிள்களை திறந்து, அதன் வழியே ஹேர் கலர் எளிதாக வெளியேற வழிவகுத்துவிடும். எனவே, எப்போதும் குளிர்ந்த நீர் அல்லது மிதமான வெதுவெதுப்பான நீரிலேயே கூந்தலை அலச வேண்டும்.
சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் அசுரத்தனமான புற ஊதாக் கதிர்கள் காஜலை மட்டுமல்ல, உங்கள் கூந்தலின் ஹேர் கலரையும் மிக வேகமாக மங்கச் செய்துவிடும்.
இதனால் முடி செம்பட்டையாக மாறக்கூடும். எனவே, வெயிலில் வெளியில் செல்லும்போது குடை பயன்படுத்துவது, தொப்பி அணிவது அல்லது கூந்தலை ஸ்கார்ஃப் கொண்டு மூடிச் செல்வது மிகவும் நல்லது.
கலரிங் செய்வதால் கூந்தல் வறண்டு, உடைந்து போக அதிக வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க வாரம் ஒருமுறை மறக்காமல் கண்டிஷனர் அல்லது கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.
மேலும், கலரிங் செய்த சில வாரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்னிங் அல்லது கர்லிங் போன்ற வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முடியின் ஆயுளைக் கூட்டும்.