

இன்றைய காலகட்டத்தில் ரசாயனங்கள் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை விட, இயற்கையான பொருட்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
அதில் முதன்மையானது கற்றாழை . அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சருமப் பராமரிப்பில் கற்றாழைக்கு தனி இடம் உண்டு.
கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.
பொலிவான சருமத்திற்கு..
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - ஒரு சிட்டிகை, தேன் - 1 ஸ்பூன் ஃபேஸ் பேக் இந்த மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு..
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன் ஆகிய மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொண்டு முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும்.
இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்களைத் தடுக்கும்.
வறண்ட சருமத்திற்கு..
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன், தேவையான அளவு வாழைப்பழத்தை நன்றாக மசித்துவிட்டு பேஸ்ட் போலச் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வறண்ட சருமம் நீங்கி முகம் மிருதுவாகும்.
கற்றாழையின் நன்மைகள்..
கற்றாழை ஜெல்லில் 99% நீர்ச்சத்து உள்ளது. இது சருமத்திற்குள் எளிதில் ஊடுருவி, எண்ணெய் பசை இல்லாத இயற்கை ஈரப்பதத்தைத் தருகிறது.
இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களைக் கட்டுப்படுத்தி, பருக்களால் ஏற்படும் வடுக்களை மறைக்கிறது.
சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சுருக்கங்களை நீக்கி, முகத்தை எப்போதும் இளமையாக வைக்கிறது.
வெயிலில் அலைவதால் ஏற்படும் டேன் மற்றும் சரும எரிச்சலை உடனே குளிர்வித்து குணமாக்குகிறது.
முகத்தில் உள்ள பிக்மென்டேஷன் மற்றும் கரும்புள்ளிகளைப் படிப்படியாகக் குறைத்து சீரான நிறத்தைத் தருகிறது.
முக்கிய குறிப்பு..
இயற்கையாக கற்றாழையைச் செடியில் இருந்து பறித்துப் பயன்படுத்தும் போது, அதில் இருந்து வெளிவரும் மஞ்சள் நிற திரவத்தை முழுமையாகக் கழுவி நீக்க வேண்டும்.
இல்லையெனில் சருமத்தில் அரிப்பு அல்லது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.