சத்து அதிகம் விலை குறைவு: நீங்க தினமும் சாப்பிட வேண்டிய பட்ஜெட் பிரண்ட்லி பழங்கள்!

ஆரோக்கியம் என்பது பணத்தைப் பொறுத்தது அல்ல, நாம் தேர்ந்தெடுக்கும் உணவைப் பொறுத்தது.
HEALTHY FRUITS
Published on

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் உணவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

ஆனால், ஆப்பிள், மாதுளை, கிவி, மற்றும் வெளிநாட்டுப் பெர்ரி போன்ற பழங்களின் விலை விண்ணைத் தொடுவதால், சாமானிய மக்கள் அவற்றை வாங்க தயங்குகிறார்கள்.

பணம் குறைவாக இருக்கிறது என்பதற்காக நீங்கள் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியதில்லை. விலை உயர்ந்த பழங்களுக்கு மாற்றாக, நம் ஊரிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் அதிக சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள்.

GUAVA - APPLE

ஆப்பிளுக்கு மாற்று: கொய்யாப்பழம்

ஆப்பிள் சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி-யை விட நான்கு மடங்கு அதிக வைட்டமின் சி கொய்யாப்பழத்தில் உள்ளது.

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தையும் சீராக்குகிறது. விலை மிகக் குறைவு என்பதால் தினமும் இதைச் சாப்பிடலாம்.

ORANGE - SWEET LIME

ஆரஞ்சுக்கு மாற்று: எலுமிச்சை / சாத்துக்குடி

ஆரஞ்சு பழத்தின் விலை அதிகமாக இருக்கும் போது, வைட்டமின் சி தேவையை நிறைவு செய்ய எலுமிச்சை சாறு அல்லது சாத்துக்குடி சிறந்த தேர்வாகும்.

தினமும் ஒரு எலுமிச்சை சாறு குடிப்பது உடலை புத்துணர்ச்சியாக வைப்பதுடன், நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

DRY FRUITS - DATES

உலர் திராட்சைக்கு மாற்று: பேரீச்சம்பழம்

விலை உயர்ந்த உலர் திராட்சை அல்லது அத்திப்பழம் வாங்க முடியாதவர்கள், இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க மலிவான விலையில் கிடைக்கும் சாதாரண ரக பேரீச்சம்பழங்களை சாப்பிடலாம். இது ரத்த சோகையை விரைவாகக் குணப்படுத்தும்.

GRAPHS - PAPAYA

திராட்சைக்கு மாற்று: பப்பாளிப்பழம்

கருப்பு மற்றும் பச்சை திராட்சைகளின் விலை சில காலங்களில் அதிகமாக இருக்கும். அதற்குப் பதிலாக ஆண்டு முழுவதும் மலிவாகக் கிடைக்கும் பப்பாளிப்பழத்தைச் சாப்பிடலாம்.

இதில் உள்ள 'பப்பேன்' என்ற என்சைம் செரிமானத்திற்கு உதவுவதோடு, சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.

AVACODA - RED BANANA

அவகேடோ பழத்திற்கு மாற்று: வாழைப்பழம்

அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகளும், பொட்டாசியமும் அதிகம் உள்ளன. ஆனால் இதன் விலை சாமானியர்களுக்கு எட்டாத ஒன்று.

இதற்குச் சிறந்த மாற்று மலிவான வாழைப்பழம் ஆகும். ஒரு வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றல், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன.

AMLA - KIWI

கிவி பழத்திற்கு மாற்று: நெல்லிக்காய்

வெளிநாட்டுப் பழமான கிவி, டெங்கு காய்ச்சல் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், இதைவிட நம் ஊர் பெரிய நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வைட்டமின் சி-யும் பல மடங்கு அதிகம். மிகக் குறைந்த செலவில் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத் திறனையும் இது உயர்த்தும்.

HEALTHY FRUITS

உடல் ஆரோக்கியம்

ஆரோக்கியம் என்பது பணத்தைப் பொறுத்தது அல்ல, நாம் தேர்ந்தெடுக்கும் உணவைப் பொறுத்தது.

எனவே, விலை உயர்ந்த பழங்களை மட்டுமே தேடி ஓடாமல், நம் மண்ணில் விளையும் இந்த மலிவான பழங்களைச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்!

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com