சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் வெந்தய கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி
Published on

குதிரைவாலி - 3/4 கப்
பச்சை பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கேரட் துண்டுகள் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு , பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 4 பற்கள்
மஞ்சத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பால் ( அ ) தேங்காய் பால் - 1/2 கப்



செய்முறை :

கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர், கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை,  சேர்த்து 3 விசில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.

விசில் போனவுடன் கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

கடைசியாக பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.

குதிரைவாலி வெந்தய கஞ்சி சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

சூப்பரான குதிரைவாலி வெந்தய கஞ்சி ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com