கொழுப்பை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலம்.
கொழுப்பை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்
Published on

பெரிய வெங்காயம் - 250 கிராம்
பிரிஞ்சி இலை - 10 கிராம்
முழு மிளகு - 15 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
கிராம்பு - 5 கிராம்
கொத்தமல்லித்தழைத்தண்டு - கால் கிலோ
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
கறிவேப்பிலை - 25 கிராம்
பூண்டு - 50 கிராம்
கொள்ளு - 100 கிராம்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 10 கிராம்
தக்காளி - 700 கிராம்
மஞ்சள்தூள் - 10 கிராம்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

செய்முறை:

* வெங்காயம், கொத்தமல்லி தண்டு, தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொள்ளுப் பயறை 3 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் புதுத் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு பூண்டு, பிரிஞ்சி இலை, மிளகு, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

* அடுத்து அத்துடன் கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சேர்த்து கரைய வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் இதில் சோம்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

* இதில் வேகவைத்த கொள்ளுப் பயறைச் சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்ததும், வடிகட்டி சாறு எடுத்து தனியாக ஒரு பவுலில் ஊற்றவும்.

* இதில் கொத்தமல்லித்தழை, மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.

* கொள்ளு மிளகு ரசம் ரெடி.

* விருப்பப்பட்டால், கொள்ளுப்பயறைச் சேர்த்து பரிமாறவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com