சுவையான சத்தான டிபன் கம்பு ரொட்டி

தினமும் சிறுதானிய உணவுகளை எடுத்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கம்பு ரொட்டி வைத்து சூப்பரான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான டிபன் கம்பு ரொட்டி
Published on

கம்பு மாவு - 300 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை ஸ்பூன்,
சீரகம் - அரை ஸ்பூன்,
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு மாவில் சிறிது உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, பதமாக இட்டு, தோசைக் கல்லில் இருபுறமும் ரொட்டி போல் சுட்டு எடுக்கவும். ஆறியதும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள கம்பு ரொட்டி துண்டுகளை சேர்த்துக் கிளறி 5 நிமிடம் கிளற கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான சத்தான டிபன் கம்பு ரொட்டி பிரட்டல் தயார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com