சத்தான காலை டிபன் டோஃபு சாண்ட்விச்

காலை உணவை சத்தானதாக எடுத்து கொண்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யலாம். இன்று டோஃபு சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் டோஃபு சாண்ட்விச்
Published on

டோஃபு - 1/2 கப்,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1
சோள முத்துகள் - ஒரு கைப்பிடி,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கோதுமை பிரெட் துண்டுகள் - 4.

செய்முறை :

* டோஃபுவை துருவிக் கொள்ளவும்.

* வெங்காயம், கேரட், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு தாளித்த பின்னர் பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பொடியாக அரிந்த குடை மிளகாய், கேரட், சோள முத்துகள் சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

* அடுத்து அதில் துருவிய டோஃபுவை சேர்த்து கிளறவும். இப்போது டோஃபு ஸ்டஃபிங் ரெடி.

* டோஃபு கலவை நன்கு ஆறியதும் கோதுமை பிரெட் துண்டங்களின் நடுவே வைத்து எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.

* சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com