உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி
Published on


 
செய்முறை :
 
கொள்ளு, பிரவுன் அரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும்.
 
கொள்ளுவை நன்றாக மைய அரைக்கவும். பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்,
 
ஒரு பாத்திரத்தில் கொள்ளு மாவு, அரிசி மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
 
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவை இட்லியாக ஊற்றி எடுத்தால் சுவையான கொள்ளு இட்லி ரெடி.

மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3:1  என்ற பங்கு விகிதத்திலும், கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் 4:1 என்ற பங்கு விகிதத்திலிலும் சேர்த்து அரைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com