சத்தான காலை டிபன் அக்கி ரொட்டி

இந்த அக்கி ரொட்டி ஆந்திராவில் மிகவும் பிரபலம். செய்வதும் மிகவும் சுலபம். இன்று அக்கி ரொட்டியை எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் அக்கி ரொட்டி
Published on

பச்சரிசி மாவு - கால் கிலோ
தேங்காய் - ஒரு மூடி
கொத்துமல்லி - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 4
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

கொத்துமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், கொத்தமல்லி, ப.மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாகப் பிசையவும்.

ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும்.

ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்துமல்லி சட்னி சிறந்தது.

விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com