குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்

தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்
Published on

துருவிய கேரட் - 1 கப்,
பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்,
இஞ்சிச்சாறு - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
பால் - 250 மி.லி.

செய்முறை :

* பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும்.

* மிக்சியில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கேரட் ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.

* வடிகட்டிய ஜூசில் வெல்லம், இஞ்சிச்சாறு, ஏலக்காய்த்தூள், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

* சத்தான சுவையான கேரட் பால் ரெடி.

குறிப்பு: பீட்ரூட்டிலும் செய்யலாம். தேன் பயன்படுத்தலாம். கூடுமானவரை அஸ்காவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com