சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தேன் எலுமிச்சை டீ

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த தேன் எலுமிச்சை டீ. காலையில் இந்த டீயை குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தேன் எலுமிச்சை டீ
Published on

நீர் - 1 கப்
பிளாக் டீ / கிரீன் டீ - ¼ தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

ஒரு முறை கொதித்ததும் அதனுடன் டீ தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து அதனை மூடி 5 நிமிடம் வைக்கவும்

ஒரு டம்ளரில் தேவையான அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்

பின்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு அதில் சூடான டீயை வடிகட்டி சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்பு அதன் மீது தேவைப்பட்டால் எலுமிச்சை துண்டை வைத்து அலங்கரிக்கவும்.

பின்பு சூடாக பரிமாறவும்.

சூப்பரான புத்துணர்ச்சி தரும் தேன் எலுமிச்சை டீ ரெடி.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com