பெண்களின் குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலியை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
பெண்களின் குதிக்கால் வலி
பெண்களின் குதிக்கால் வலி
Published on

பெண்களின் வீட்டு வேலைகளை செய்வது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணி புரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதே நேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமானது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலி. இதை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள்

* உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும்

* காலணிகளை காலுக்கு தந்தவாறு அணியாமல் பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிக்கால் வலி உண்டாகும்.

* ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிக்கால் வலி வரலாம்.

* அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதாலும் குதிக்கால் வலி ஏற்படும்.

குதிக்கால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்

* ஒரு வாணலியில் அரிசித்தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துகொள்ள வேண்டும். அதை பருத்தி துணியில் மூட்டையாக கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிக்கால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.

* நொச்சி இலை சாற்றில் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும். இரவில் உறங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை குதிக்காலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிக்கால் வலி நீங்கும்.

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையை குறைக்கலாம். இதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதை தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிக்கால் வலி கட்டுப்படும்.

* வில்வக்காயை நெருப்பில் சுட்டு அதை கொண்டு குதிக்கால் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

* பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து விடுபடலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com