

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1 (வேண்டுமென்றால்)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் சீவிய பின் அதனை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளி, வெங்காயத்தை துருவியது போல் மெலிதாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்
இப்போது நொடியில் வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!