கூந்தலுக்கான ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்

கூந்தலுக்கான இயற்கை மணம் கொண்ட ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த ஷாம்புவை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கூந்தலுக்கான ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்
கூந்தலுக்கான ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்
Published on

இப்போதெல்லாம் கெமிக்கல்கள் அற்ற பொருட்களை பயன்படுத்த மக்கள் ஆரம்பித்து விட்டனர். என்றாலும் ஒரு சில அன்றாட முக்கிய பொருட்கள் கெமிக்கல்கள் உடன்தான் கிடைக்கிறது. அதில் ஒன்றுதான் ஷாம்பூ. இதிலும் கெமிக்கல் குறைவானவைகளைத் தேர்ந்தெடுத்தாலும் முழுமையான ஆர்கானிக் ஷாம்பூக்களாக (organic shampoo) அவை இருப்பதில்லை.

இதனைப் போக்க மிக எளியமுறையில் ஆர்கானிக் ஷாம்பூவை எப்படித் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புங்க கொட்டை அல்லது பூந்திக் கொட்டை - 10

சிகைக்காய் - 1 கப்

நெல்லிமுள்ளி - 1 கப்

வெந்தயம் - 1 கப்

செம்பருத்தி பூக்கள் - 3

மேற்கூறிய அனைத்து பொருள்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. செம்பருத்தி பூக்கள் மட்டும் உங்களுக்கு பிரெஷாக கிடைத்தால் அதனைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் பரவாயில்லை.

செய்முறை

முதலில் புங்ககொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய பூந்திக் காய்களை போடுங்கள் .

அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள்.

கூடவே நெல்லி முள்ளியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சேருங்கள்.

அதனுடன் சிகைக்காய்கள் 6 எடுத்து சேர்த்திடுங்கள்.

இவைகளை ஒரு கப் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள்.

அதன்பின்னர் மறுநாள் காலையில் தண்ணீர் பிரவுன் நிறமாக மாறியிருக்கும்.

ஒரு பாத்திரத்தில் இவைகளை மாற்றுங்கள். அதனை அடுப்பில் வையுங்கள். இவைகளோடு மூன்று செம்பருத்தி பூக்களை இதழ்களாக அதனுடன் சேருங்கள்.

அடுப்பை பற்ற வைத்து இந்தக் கலவையில் உள்ள நீர் கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சுங்கள்.

ஆறியபின் காய்ச்சிய நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.

மேலும் இதனை நீங்கள் பிரிட்ஜில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

உங்கள் ஷாம்பூ தயார் ! அதன் பின்னர் குளிக்கும்போது இந்த ஷாம்பூவை பயன்படுத்திப் பாருங்கள் !

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com