சப்பாத்திக்கு சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி

சப்பாத்திக்கு சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி

நெல்லிக்காய் தயிர் பச்சடி சப்பாத்தி, ஆப்பம், தோசையுடன் பரிமாற சூப்பராக இருக்கும். இன்று நெல்லிக்காய் தயிர் பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Published on

பெரிய நெல்லிக்காய் - 12,
தேங்காய் - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 3,
புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,
பெருங்காயத்தூள் - சிறிது.

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 ஸ்பூன்.

செய்முறை :

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

தேங்காய், பச்சைமிளகாயை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.

X

Maalai Malar
www.maalaimalar.com