

முலாம்பழத் துண்டுகள் - ஒரு கப்,
தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப்,
கிவித் துண்டுகள் - ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்,
தேன் - தேவையான அளவு,
டிக்கா குச்சிகள் - தேவையான அளவு.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் முலாம்பழத் துண்டுகளுடன், தர்பூசணித் துண்டுகள், கிவித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து கலக்கவும்.
டிக்கா குச்சியில் முதலில் முலாம்பழத் துண்டை குத்தவும். அதன் மீது தர்பூசணித் துண்டு, கிவித்துண்டு என மாற்றி மாற்றி குத்தி பரிமாறவும்.
பலன்கள்: தாகத்தை தணிக்கும். பழங்கள் சாப்பிட அடம் பிடிக்கும் குட்டீஸ்களை சுலபமாக சாப்பிட வைத்து விடலாம்.