சத்து நிறைந்த வெந்தயக்கீரை - ஓமம் சப்பாத்தி

வெந்தயக்கீரை, ஓமம் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வெந்தயக்கீரை, ஓமம் சேர்த்து சத்தான சுவையான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த வெந்தயக்கீரை - ஓமம் சப்பாத்தி
Published on

தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - 2 கப், 

வெந்தயக்கீரை - ஒரு கட்டு, 

ஓமம் - ஒரு டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு, 

[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, 

பச்சை மிளகாய் - 3.

செய்முறை : 

வெந்தயக்கீரையைக் காம்பு கிள்ளி, அலசி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பச்சை மிளகாய், ஓமம், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி சாறெடுக்கவும். 

கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இந்தச் சாறைக் கலந்து, வெந்தயக்கீரையையும் போட்டு, சிறிது வெந்நீர் ஊற்றிப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். (வெந்நீரின் சூட்டிலேயே வெந்தயக் கீரை வெந்துவிடும்). பிசைந்த மாவை அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

பிசைந்த மாவை, சப்பாத்திகளாகத் திரட்டி, வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.  

இதற்கு தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com