சூப்பரான மாலை நேர டிபன் முட்டை பரோட்டா

கோதுமை மாவில் பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட எளிய முறையில் முட்டை சேர்த்து பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான மாலை நேர டிபன் முட்டை பரோட்டா
Published on

கோதுமை மாவு -1/2 கப்
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகு - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
முட்டை - 2
பச்சைமிளகாய் - 1
மஞ்சள்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு நன்கு மாவை பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, ப,மிளகாய், மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* மாவை பூரிக்கட்டையால் சப்பாத்தி போல் அகலமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தேய்த்து வைத்த மாவை இட்டு அதன் மேலாக முட்டை கலவையை மாவு முழுவதும் படும்படி பரப்பி ஊற்றி சுற்றி வெண்ணெய் தடவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

* சூப்பரான மாலை நேர டிபன் முட்டை பரோட்டா ரெடி!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com