தேவையான பொருட்கள் :
கருப்பு எள் - அரை கப்,
பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 5,
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - கோலி அளவு,
உப்பு - ருவைக்கேற்ப.
செய்முறை :
வெறும் வாணலியை வைத்து சூடானதும் எள்ளை போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து பூண்டு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, புளியை தனித்தனியாக சேர்த்து வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்களை ஆற வைத்து நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
சூப்பரான எள் துவையல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.