குழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா

குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு முட்டை சேர்த்து சூப்பரான மேகி முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா
Published on

தக்காளி - 2
வெங்காயம் - 1
மேகி பாக்கெட் - 1
ப.மிளகாய் - 2
முட்டை - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சிக்கன் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மேகி மசாலா சேர்க்கவும்.

அடுத்து அதில் மேகி நூடுல்ஸை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

மேகி நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்

சூப்பரான மேகி முட்டை மசாலா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com