

தேவையான பொருட்கள்:
முட்டை - 5,
பூண்டு - 2 பல்,
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மிளகாய் வத்தல் - 2,
முருங்கைக்காய் - 1,
சின்ன வெங்காயம் - 1/2 கப்,
பச்சை மிளகாய் - 4,
தேங்காய் துருவல் - 1/2 கப்
தேங்காய், எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
முட்டையை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் சீரகம், ப.மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முருங்கைக்காயை போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணிர் ஊற்றி காய் வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.
முருங்கைக்காய் வெந்தபின் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
கடைசியாக வேக வைத்த முட்டையை போட்டு முட்டை உடைந்து விடாமல் மசாலாவுடன் கிளறி 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.
அருமையாக சைடிஷ் முட்டை - முருங்கைக்காய் அவியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.