இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்

வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.
இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்
Published on

அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமையாகவே காதுகேளாமை வந்துவிடும்.

* தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.

* அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும்.

* காதில் மந்தமான நிலை உருவாகும்; காது மரத்துப் போகும்.

பரிசோதனை முறைகள்:

* இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுகவேண்டும்.

* முதல்கட்டமாக, அடிப்படையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, காதின் உட்பகுதியில் பாதிப்பு உள்ளதா,  காதின் நடுப்பகுதியில் பாதிப்பு உள்ளதா, நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும்.

* அடுத்த கட்டமாக, ஆடியோலாஜிக்கல் (Audiological test), ஆடியோகிராம் (Audiogram) போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கேட்கும் திறன் பாதிப்புகளும் காது கேளாமை திறன் பாதிப்புகளும் உறுதிசெய்யப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com