கொழுப்பை குறைக்கும் ‘டிராகன்’ பழ ஜூஸ்

உடல் எடை, கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி டிராகன் பழம் சாப்பிடலாம். இன்று ‘டிராகன்’ பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கொழுப்பை குறைக்கும் ‘டிராகன்’ பழ ஜூஸ்
Published on

டிராகன் பழம் - 1 கப் (நறுக்கியது)
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி - தேவையான அளவு
குளிர்ந்த நீர் - தேவையான அளவு

செய்முறை :

டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை துண்டுகளாக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் டிராகன் பழத்துண்டுகளை போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃபுரூட் ஜூஸ் ரெடி!!!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com