அருமையான மதிய உணவு தயிர் சேமியா

சேமியா சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு பழங்கள் போட்டு தயிர் சேமியா செய்து கொத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
அருமையான மதிய உணவு தயிர் சேமியா
Published on

சேமியா - 200 கிராம்
தயிர் - ஒரு கப்,  
மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.

தாளிக்க :

மிளகு - 10,
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை,

காய்ந்த மிளகாய் (கிள்ளியது) - 2

சேமியாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.

இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு உருகியதும், தாளிக்கும் பொருட்களை சேர்தது தாளித்து சேமியா கலவையுடன் சேர்க்கவும்.

பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான தயிர் சேமியா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com