சத்து நிறைந்த வெள்ளரிக்காய் கோதுமை தோசை

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வெள்ளரிக்காய் கோதுமை தோசை செய்முறையை பார்க்கலாம்.
சத்து நிறைந்த வெள்ளரிக்காய் கோதுமை தோசை
Published on

வெள்ளரிக்காய் - 4,
கோதுமை மாவு - ஒரு கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிட்டிகை,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், வெள்ளரிக்காய் துருவல், தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.

தோசைக்கல்லை காய வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான வெள்ளரிக்காய் கோதுமை தோசை ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com